பீகார் நூடுல்ஸ் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள பெலா தொழிற்பேட்டையில் அமைந்துள்ள நூடுல்ஸ் தயாரிப்பு தொழிற்சாலையில் கொதிகலன் (பாய்லர்) வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். அதேநேரம், இந்த சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தகவல் கிடைத்ததும் மாவட்ட எஸ்பி மற்றும் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இச்சம்பவம் இன்று காலை 10 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது.
சத்தம் மிகப் பெரியதாக இருந்ததால், அதன் சத்தம் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை மக்கள் கேட்டதாக கூறப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைக்கு வந்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் நிவாரணத்தை முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது. இந்நிலையில், 2ஆம்…
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…