பிபின் ராவத், மதுலிகா ராவத்தின் உடல்களுக்கு முழு ராணுவ மரியாதை செலுத்திய பின்னர் தகனம் செய்யப்பட்டது.
குன்னூரில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை 13 பேரின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து டெல்லியில் உள்ள பாலம் விமான தளத்திற்கு நேற்று இரவு 8 மணிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ அதிகாரிகளின் உடல்களுக்கு பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படைகளின் தளபதிகள் மலர் தூவியும், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் இன்று காலை 11 மணி முதல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவிற்கு பொதுமக்களும், ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கிடையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் திமுக எம்.பிக்கள் ஆகியோர் பிபின் ராவத் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதைதொடந்து, பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் 2 மணிக்கு தொங்கியது. காமராஜ் மார்க் வழியாக டெல்லி கன்டோன்மென்ட் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது சாலை எங்கிலும் இறுதி ஊர்வலத்தில் தேசிய கொடியுடன் முழக்கமிட்டு மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
கன்டோன்மென்ட் மயானத்தில் பிபின் ராவத் இரு மகள்கள், குடும்பத்தினர், ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டனர். அங்கு பிரிட்டன், பிரான்ஸ், தூதர்கள் இலங்கை, பூடான் நேபாளம், வங்காளதேசம் ராணுவ தளபதிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இராணுவ வீரர்கள் இசை முழங்க இதய அஞ்சலி செலுத்தப்பட்ட பின், மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இறுதியாக பிபின் ராவத், மதுலிகா ராவத்தின் உடல்கள் தகன மேடைக்கு கொண்டு வரப்பட்டு 17 சுற்று பீரங்கி குண்டுகள் முழங்க 800 ராணுவ வீரர்களின் மரியாதையுடன் இருவரின் உடல்கள் தகனம் செய்யப்பட்டது.
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…