குஜராத் கடற்கரை அருகே போதைப்பொருளுடன் பிடிபட்ட படகு ; 9 பேர் கைது!

நேற்று ஒன்பது பேருடன் குஜராத் கடற்கரைக்கு வந்த பாகிஸ்தானை சேர்ந்த மீன்பிடி படகு ஒன்று குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை போலீசார் மற்றும் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளது. இந்த படகில் இருந்த ஒன்பது பேருடன் படகில் போதை பொருட்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக கூறியுள்ள கடலோர காவல்படையினர், அந்த படகை இந்திய கடல் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்ததாகவும், அதில் பல போதைப்பொருட்கள் இருந்ததாகவும், அவர்கள் அதை கடலில் வீசிவிட்டு பாகிஸ்தானுக்கு திரும்ப முயன்றபோது அவை அனைத்தும் கைப்பற்றப்பட்டு அவர்களும் பிடிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானிலிருந்து வந்த படகு அதிவேகமாகச் செல்லக் கூடியதாக இருந்ததால் அவர்கள் தப்பிச் செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கடலோர காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டி இருந்ததாகவும், இந்த துப்பாக்கி சூட்டில் படகில் இருந்த ஒருவர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025