அசாம் மாநிலத்தின் பிரம்மபுத்ரா ஆற்றில் ஏற்பட்ட படகு விபத்தில் 70 பேரை காணவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலம் ஜோராட் பகுதியில் உள்ள பிரம்மபுத்ரா ஆற்றில் நேற்று மா கமலா என்ற எந்திர படகு புறப்பட தாயாராக இருந்த நிலையில், அவ்விடத்திற்கு மற்றொரு படகு வந்துள்ளது. இதனால் வரும் படகிற்கு இடம் அளிக்க மா கமலா படகு சற்று நகர்ந்துள்ளது. மா கமலா படகில் 120 பயணிகள் இருந்துள்ளனர். இந்த நிலையில் படகு நகர்ந்த போது எதிரே வந்த படகின் மீது மோதியுள்ளது.
இதில் மா கமலா படகு ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இதன் காரணத்தால் அதில் இருந்த 120 பயணிகளும் ஆற்றில் மூழ்கியுள்ளனர். இதில் சிலர் நீச்சல் அடித்து கரையேறியுள்ளனர். மேலும், பலர் நீரில் மூழ்கியதை தொடர்ந்து அவ்விடத்திற்கு உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில மீட்பு படையினர் விரைந்து மீட்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து இன்று மீட்பு பணியில் ராணுவமும் இணைய உள்ளது. இந்த படகு கவிழ்ந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், 3 பேர் காயமடைந்துள்ளனர். 42 பேர் இந்த ஆற்றிலிருந்து மீட்கபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த ஆற்றில் மூழ்கியுள்ள 70 பேரை தேடும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…