கொரோனாவிலிருந்து பாதுகாக்க ரயில்வே நிலையம் விமானநிலையத்தில் உள்ள போர்டிங் வசதி போன்று ரயில்வே நிலையத்திலும் புதிய முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் தற்போது இந்திய ரயில்வே உத்திர பிரதேச மாநிலம் பிரயாகராஜ் ரயில்வே நிலையத்தில் பயணிகளுக்கும், ஊழியர்களுக்கும் தொடர்பு இல்லாமல் போர்டிங் பாஸ் மற்றும் டிக்கெட் சோதனை முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. சமீபத்தில் கூட பிரயாகராஜ் ரயில் நிலையத்தில் ஆட்டோமேட்டிக் QR CODE மூலம் டிக்கெட் ஸ்கேனிங் முறை செயல்படுத்தப்பட்டது.
தற்போது விமானநிலையம் போன்று போர்டிங் வசதி மற்றும் டிக்கெட் சோதனை வசதியை ரயில்வே நிலையத்திலும் அறிமுகப்படுத்துவதாக வது மத்திய ரயில்வே மண்டலம் வெளியிட்டுள்ளது. அதாவது பிரயாகராஜ் ரயில் நிலையத்தில் வரும் பயணிகளை முதலில் போர்டிங் ஹாலுக்கு அழைத்து செல்லபடுகிறார்கள். அங்கு தொடர்பு இல்லாத நான்கு செக்-இன் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும் ஒவ்வோரு கவுண்டர்களிலும் இருவழி கண்ணாடியால் பிரிக்கப்பட்ட TFT மானிட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு புறம் பயணிகளையும், மறுபுறம் பயணிகளை சோதனை செய்யும் ஊழியர்களும் பார்க்க முடியும். மேலும் பயணிகளின் டிக்கெட் மற்றும் பிற விவரங்களை ஸ்கேன் செய்வதற்கு வெப்கேம் பொருத்தப்பட்டுள்ளது.
அந்த வெப்கேம் டிக்கெட்களை சரிப்பார்க்கும் ஊழியர்களின் கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும். மேலும் பயணிகளின் PNR-ஐ வெப்கேம் மூலமோ, QR CODE மூலமோ விவரங்களை டிக்கெட் சோதனை ஊழியர்கள் சரிபார்க்கின்றனர். இருவரும் தொடர்பு கொள்வதற்காக மைக்ரோஃபோன்களும், ஸ்பீக்கர்களும் வழங்கப்பட்டுள்ளன.
அதனையடுத்து, பயணிகளின் அடையாளம் சரிப்பார்த்த பின்னர், பிரிண்டர் மூலம் போர்டிங் பாஸ் அச்சிடப்பட்டு, அதில் பெயர், PNR எண், கோச் நம்பர், பெர்த் நம்பர் போன்றவை இருக்கும். போர்டிங் பாஸூடன் அவர்கள் ரயிலுக்குள்ளையோ, ரயில்வே வளாகத்திலும் நுழையலாம். ஆனால் அவர்கள் தங்களது டிக்கெட் மற்றும் அடையாள அட்டையையும் வைத்திருக்க வேண்டும்.
அதனையடுத்து டிக்கெட் சோதனை ஊழியர்கள் பயணிகளின் நிலையை சோதனை செய்கின்றனர். இவை பயணிகளுக்கும், ரயில்வே ஊழியர்களுக்கும் உதவும் என்று தெரிவித்ததோடு, இதன் மூலம் ரயிலில் காலியாக உள்ள பெர்த்களையும் அடையாளம் காண உதவும் என்று வட மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…