Categories: இந்தியா

கிசான் திட்டம்: வங்கிக் கணக்கில் வருகிறது ரூ.2000.. இவர்களுக்கு மட்டும் கிடையாது.!

Published by
கெளதம்

கிசான் சம்மன் நிதி யோஜனா : நாடு முழுவதும் தகுதியான விவசாயிகளுக்கு மத்திய அரசின் ‘பிரதமர் கிசான்’ திட்டத்தின் மூலம், ஆண்டுக்கு ரூ.6,000 பணத்தை 3 தவணைகளாக (ரூ.2,000 வீதம்) வழங்கி வருகிறது.

இது வரை 16 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 17வது தவணை தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்டார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதன்படி, நாளை மறுநாள் (ஜூன் 18) விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000 வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 17-வது தவணை மூலம், நாடு முழுவதும் உள்ள சுமார் 9.3 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி வழங்கப்பட உள்ளது. 2 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் கிசான் திட்டத்தில் உடல் ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யாருக்கு கிடையாது?

இந்நிலையில், eKYC பூர்த்தி செய்யாதவர்களுக்கு இந்த முறை பணம் கிடைக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. pmkisan.gov.in இணையதளத்தின் மூலமாகவோ, அருகிலுள்ள டிஜிட்டல் சேவா போர்டல் (csc) செண்டர் மூலமாகவோ eKYC பூர்த்தி செய்யலாம்.

eKYC  ஆன்லைனில் பெறுவது எப்படி?

  • https://pmkisan.gov.in/ இணையதளத்தை பார்வையிடவும்.
  • ‘விவசாயிகள் கார்னர்’ என்பதன் கீழ், e-KYC விருப்பத்தைப் பார்த்து, அதனை கிளிக் செய்யவும்.
  • இப்பொது, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் உங்கள் ஆதார் விவரங்களை கொடுக்கவும்.
  • சரிபார்ப்பிற்காக மொபைல் போனுக்கு OTP அனுப்பப்படும்.
  • அந்த OTP-ஐ கொடுத்தால் போதும், e-KYC செயல்முறை முடிவடையும்.
Published by
கெளதம்

Recent Posts

மணிமேகலை vs பிரியங்கா : இதெல்லாம் ஒரு பிரச்சினையா? சீறிய ஜிபி முத்து!!

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை பெரிய அளவில் பேசுபொருளாகி தற்போது மெல்ல மெல்லக்…

1 hour ago

இந்த 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை.!

சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…

2 hours ago

WWT20 : ‘நாங்க சரியா விளையாடல’! தோல்வியை ஒத்துக்கொண்ட இந்திய மகளிர் அணி கேப்டன்!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 4-வது போட்டியாக நேற்று நியூசிலாந்து மகளிர் அணியும் இந்திய மகளிர்…

2 hours ago

“கைது செய்யப்பட்டவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.” – தவெக மறுப்பு.!

கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு…

2 hours ago

ஜில் ஜில்..கூல் கூல்! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…

2 hours ago

தீவிரமடையும் பருவமழை.. அதிகாரிகளுக்கு அதிரடி ஆர்டர் போட்ட துணை முதல்வர்.!

சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

2 hours ago