இந்தியாவில் 8 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ்..!
இந்தியாவில் எட்டு இந்திய கடற்கரைகளுக்கு சர்வதேச நீல கொடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
எட்டு இந்திய கடற்கரைகளுக்கு சர்வதேச நீல கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று தெரிவித்தார். மேலும், இந்தியாவுக்கு பெருமைமிக்க தருணம்; அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து 8 கடற்கரைகளும் சர்வதேசநீலக்கொடி சான்றிதழைப் பெறுகின்றன. ஒரே ஒரு முயற்சியில் 8 கடற்கரைகளுக்கு எந்த நாட்டிலும் நீலக்கொடி வழங்கப்படாததால், இது ஒரு சிறந்த சாதனை, என்று ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
தூய்மை, பாதுகாப்பு, போன்றவற்றின் அடிப்படையில் நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்படுகிறது. சுமார் ஆறு ஆண்டுகளில் ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இரண்டு நீலக்கொடி சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
நீலக் கொடி வழங்கப்பட்ட கடற்கரைகள்:
சிவராஜ்பூர் (குஜராத்), கோக்லா (டையூ), கசர்கோட் மற்றும் படுபித்ரி (கர்நாடகா), கப்பாட் (கேரளா), ருஷிகொண்டா (ஆந்திரா), கோல்டன் (ஒடிசா) மற்றும் ராதாநகர் (அந்தமான்) நிக்கோபார் .