பழந்தின்னி வவ்வால்களின் ரத்த மாதிரி நிபா வைரஸ் இல்லை..!
கேரளத்தில் பழந்தின்னி வவ்வால்களின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ததில் அவற்றில் நிபா வைரஸ் இல்லை எனத் தெரியவந்துள்ளது.
கேரளத்தின் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் தாக்கி 17பேர் உயிரிழந்தனர். இந்த வைரஸ் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவுவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் பழந்தின்னி வவ்வால்களின் 13 ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.
13 மாதிரிகளிலும் நிபா வைரஸ் இல்லை எனத் தெரியவந்துள்ளது. இதேபோல் பூச்சிகளை உண்ணும் வவ்வால்கள், முயல்கள், ஆடுகள், பன்றிகள் ஆகியவற்றின் ரத்த மாதிரிகளும் ஏற்கெனவே ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவற்றிலும் நிபா வைரஸ் இல்லை எனத் தெரியவந்துள்ளதாகவும் கேரள கால்நடைப் பராமரிப்புத் துறை இயக்குநர் சசி தெரிவித்துள்ளார். இரண்டாம் கட்டமாக நிபா வைரஸ் பரவலைத் தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகக் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.