தமிழகத்தை சேர்ந்த இருவரின் ரத்த மாதிரி புனேவில் பரிசோதனை-கேரள அமைச்சர்
சீனாவில் இருந்து கேரளாவிற்கு திரும்பிய 72 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று கேரள மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.சீனா மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது.இதனால் உலகின் பிற நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்கத்தால் 811 பேர் உயிரிழந்துள்ளனர். .இந்த வைரஸ் இதுவரை இந்தியாவில் கேரள மாநிலத்தில் 3 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரள மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ஷைலஜா இது குறித்து கூறுகையில்,சீனாவில் இருந்து கேரளாவிற்கு திரும்பிய 72 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தமிழகத்தை சேர்ந்த இருவரின் ரத்த மாதிரியும் புனே பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.