பிரதமரின் பிறந்தநாளை ஒட்டி ரத்ததானம், பிளாஸ்மா தானம் – பா.ஜா.கவினர் ஏற்பாடு!
பிரதமரின் பிறந்தநாளை ஒட்டி ரத்ததானம், பிளாஸ்மா தானம் போன்ற மக்கள் நல பணிகள் செய்ய பா.ஜா.கவினர் ஏற்பாடு.
வருகிற 17-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 70 ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிரதமரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட பாரதிய ஜனதா கட்சியினர் விரும்புகின்றனர். எனவே பிரதமரின் 70 ஆவது பிறந்த நாளை ஒட்டி பல திட்டங்களை தீட்டி உள்ள பாஜகவினர், வருகிற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 14ஆம் தேதியின்போது தொடங்கப்படும் பிரதமரின் பிறந்தநாள் கொண்டாட்டம் அக்கூட்டம் முடிகின்ற நாளான அக்டோபர் இரண்டாம் தேதி வரைக்கும் கொண்டாடப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பிரதமர் பிறந்தநாள் கொண்டாட்ட நாட்களில் பிளாஸ்டிக் எதிர்ப்பு பிரச்சாரம், துணியால் தயாரிக்கப்பட்ட பைகளை விநியோகித்தல், ரத்ததான முகாம், இலவச கண் சிகிச்சை முகாம், மூக்கு கண்ணாடிகள் வழங்கும் முகாம், பிளாஸ்மா தானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். இதுபற்றி பாஜக தலைவர் ஓம்பிரகாஷ் அவர்கள் கூறும் பொழுது, இக்கொண்டாட்டங்களின் முன்னுரிமையாக பொதுநலன் தான் இருக்கும் என கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடியின் பிறந்த நாள் ஒரு பகுதியாக கொரானா வைரஸ் தொற்று நோயில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.