ஆட்சியாளர்கள் எப்படி இருக்கவேண்டும்..? உதரணமாக கேரளா கம்யூனிஸ்ட் முதல்வர்
கேரளா வந்த ஷார்ஜா அதிபர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காஸிமியிடம் முதல்வர் பிணராயி விஜயன் ஷார்ஜா சிறைகளில் இருக்கும் இந்திய கைதிகளை விடுவிக்க வேண்டுகோள் வைத்ததும் அதை ஏற்று அவர் 149 பேரை விடுதலை செய்வதாக அறிவித்ததும் நாம் அறிந்ததே.
இந்த விஷயத்தை தான் செய்ததாக மத்திய அமைச்சர் சுஷ்மாசுவராஜ் டூ வீட்டரில் எழுதி விட்டு கேரள மக்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கும் இந்த சுவாரசியங்களெல்லாம் ஒருபுறமிருக்க, முதல்வர் பிணராய் விஜயன் கைதிகளின் விடுதலை விஷயத்தில் அடுத்த கட்டத்திற்குச் சென்றிருக்கிறார்.
ஷார்ஜா அதிபரிடம் தான் விடுத்த வேண்டுகோளையும் அதற்கு கிடைத்த பலனையும் சுட்டிக்காட்டி “இந்த நல்ல சூழலைப் பயன்படுத்தி ஐக்கிய_அரபு நாடுகளின் மற்ற பகுதிகளிலும் உள்ள இந்திய கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுங்கள்” என சுஷ்மாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆட்சியாளர்கள் என்றால் கேரளா இடது முன்னணி முதல்வர் பிணராயி விஜயனைப் போல் இருக்கவேண்டும்!