பிகார் பல்கலை., விண்ணப்ப படிவத்தில் பிள்ளையார் படம்…!
பிகார்: பிகாரின் லலித் நாராயண் மிதிலா என்ற பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டு மாணவருக்கு வழங்கிய அனுமதி அட்டையில் மாணவரின் புகைப்படத்திற்கு பதிலாக பிள்ளையார் புகைப்படம் பதியப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. பிகாரின் லலித் நாராயண் மிதிலா பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் ஜே.என். கல்லூரி என பரவலாக அழைக்கப்படும், ஜக்தேஷ் நந்தன் கல்லூரியில் இளங்கலை பொருளியல் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட அனுமதி சீட்டினில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக பிள்ளையாரின் படம் இடம் பெற்றுள்ளது.
பிள்ளையாருக்கு எப்போதுதான் பிகார் பல்கலைகழகத்திற்கு படிக்க சென்றாரோ….?