என்னை விட சிறந்த பிரதமராக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இருந்திருப்பார்…முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
நேற்று டெல்லியில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது .இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ”தான் அரசியலுக்கு வந்தது ஒரு மிகப் பெரிய விபத்து எனவும் பிரதமர் பதவிக்கு தன்னை விட பிரணாப் முகர்ஜி தான் பொருத்தமானவராய் இருந்தார் என்றும் அவர் தெரிவித்தார். ஆனாலும் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படாததை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், தன்னுடன் சுமூகமாக பிரணாப் முகர்ஜி பழகினார்” என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,சமாச்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்,திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சஞ்சீவ் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.