வரலாற்றில் இன்று-ஜிம்பாப்வே என அழைக்கப்படும் ரொடீஷியா (பழைய பெயர்) விடுதலை அடைந்த நாள்
வரலாற்றில் இன்று – நவம்பர் 11, 1965 – தென் ஆப்பிரிக்க நாடான தற்போது ஜிம்பாப்வே என அழைக்கப்படும் ரொடீஷியா (பழைய பெயர்) விடுதலை அடைந்த நாள். ஆப்பிரிக்க மக்களின் புரட்சி வென்று இயான் ஸ்மித் என்ற ஆங்கிலேய பிரதமரின் ஆட்சி கவிழ்ந்தது. ஜிம்பாப்வே தேசிய யூனியன் கட்சித்தலைவர் ராபர்ட் முகாபே தலைமையிலான புதிய ஆட்சி பொறுப்பேற்றது. அதன் பின்னர் படிப்படியாக அனைத்து உலக நாடுகளின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றது. கருப்பு வெள்ளைப் படத்தில் ஜிம்பாப்வே விடுதலைப் பத்திரத்தில் இயான் ஸ்மித் கையொப்பமிடும் காட்சி