மெர்க்கண்டைல் வங்கியில் செக்யூரிட்டி அதிகாரி வேலை…!
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள செக்யூரிட்டி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Chief Security Officer (Scale -IV)
சம்பளம்: மாதம் ரூ.80,000
வயதுவரம்பு: 50 வயதை பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
தகுதி: முப்படைகளில் ஏதாவதொன்றில் பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது காவல்துறையில் மாவட்ட காவல்துறை அதிகாரியாக பணியாற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.tmbnet.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து உரிய இடத்தில் புகைப்படத்தை ஒட்டி கையொப்பமிட்டு, தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் செய்து இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்ய அஞ்சல் முகவரி:
The General Manager,
Human Resources Development,
Tamilnadu Mercantile Bank Ltd.,
Head Office, # 57, V.E. Road, Thoothukudi – 628 002.
The General Manager,
Human Resources Development,
Tamilnadu Mercantile Bank Ltd.,
Head Office, # 57, V.E. Road, Thoothukudi – 628 002.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.10.2017
மேலும் முழுமையான விவரங்களை அறிய www.tmbnet.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.