மத்திய அரசு நாட்களை குறைக்க திட்டம் குளிர்கால கூட்டத்தொடரில் !எதிர்கட்சிகள் எதிர்ப்பு ..
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடை பெறுவது வழக்கம்.
இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் நாட்களை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மத்தியில் தொடங்கும். டிசம்பர் 3 வது வாரம் வரை சுமார் ஒரு மாத காலம் நடைபெறும். இந்நிலையில் குஜராத் சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14 தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது. எம்பிக்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு வசதியாக இந்த கூட்டத்தொடரின் நாட்களை குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே நவம்பர் இறுதியில் குளிர்கால கூட்டத்தொடரை தொடங்கி ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் மட்டும் ெதாடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மக்களவை செயலக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மத்திய அரசின் திட்டத்துக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி டெரக் ஒ பிரைன் கூறுகையில், குளிர் கால கூட்டத்தொடர் தேதிைய இன்னமும் ஏன் மத்திய அரசு அறிவிக்கவில்லை. கூட்டத்தொடர் நாட்களை குறைப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றார்.