நான் நினைத்திருந்தால் அருண் ஜெட்லிக்கு பதவி கிடைக்காமல் செய்திருக்க முடியும் போட்டு தாக்கும் யஸ்வந்த் சின்ஹா
முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தற்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
பிரதமர் மோடியும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் இந்திய பொருளாதாரத்தை சிதைத்து விட்டார்கள் என்று பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா சாமிபத்தில் பேசியிருந்தார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த சின்ஹா ஆளும் பாஜக அரசை இவ்வாறு விமர்சித்தது சர்ச்சையைக் கிளப்பியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அருண் ஜெட்லி பின்வருமாறு பேசியுள்ளார். சின்ஹா 80 வயதில் வேலை கேட்டு விண்ணப்பித்தவர். அவர் நிதி அமைச்சராக இருந்தபோது 15 சதவீத வாராக்கடன் இருந்தது. இதை அவர் மறந்துவிடக்கூடாது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அருண் ஜெட்லிக்கு பதில் அளிக்கும் வகையில், யஷ்வந்த் சின்ஹா, நான் நிதி அமைச்சர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தால் தற்போது இருக்கும் இடத்தில் அவர் இருந்திருக்க மாட்டார் என்று என அதிரடியாக குறிப்பிட்டுள்ளார்.