கேரள இடது முன்னணி முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து நன்றி தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன்
திருவனந்தபுரத்தில் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதல்வர் திரு.பினராய் விஜயன் அவர்களோடு சந்திப்பு.
கேரளாவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தியதற்கும், விடுதலைச்சிறுத்தைகளின் மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றியதற்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கினார்.