ராணுவ மருத்துவர்கள் சிகிச்சை !ராஜஸ்தான் மருத்துவர்கள் போராட்டம் எதிரொலி !
வேலை நிறுத்தத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டதால் ராஜஸ்தானில் நோயாளிகள் கடும் அவதிபட்டனர் . ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா, பண்டி, பாரன் மற்றும் ஜலாவர் உள்ளிட்ட மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் டாக்டர்கள், சம்பள உயர்வு உள்ளிட்ட 33 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெய்சல்மேர் மாவட்ட அரசு மருத்துவமனையிலுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ராணுவத்தினர் நடவடிக்கை மேற்கொண்டனர். ராணுவ மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவைகளை வரவழைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். டாக்டர்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக அரசை கண்டித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் .