டெல்லி :வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் எதை சாப்பிட வேண்டும்,எதை குடிக்க வேண்டும் என முடிவு செய்வது அரசின் வேலை இல்லை என்று நிதிஆயோக்கின் தலைமை செயல்அலுவலர் அமிதாப் கந்த் தெரிவித்துள்ளார். மாட்டிறைச்சி, மது தடை காரணமாக நாட்டின் சுற்றுலா துறை பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.