ஆதார் பிரச்சினையில் நீதிமன்றம் அதிரடி !மேற்கு வங்கத்தின் வழக்கு தள்ளுபடி..
ஆதார் வந்த நாள் முதல் இப்போது வரை மக்கள் இடம் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது .குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சிலிண்டர் ,வங்கி கணக்கு,பான் கார்டு, உட்பட அனைத்துக்கும் ஆதார் தேவை என்று கூறி வந்த நிலையில் தற்போது மொபைல் எண்ணிற்கும் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு கூறியது.
ஆனால் இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிப்பு தெரிவித்தார்.தான் போன் எண்ணை ஆதாருடன் இணைக்க போவதில்லை என்றும் கூறியிருந்தார் .இது தொடர்பாக மம்தா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் .இன்று விசாரித்த நீதிபதி மத்திய அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு எவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்க முடியும் என்று கேட்டனர் .எனவே மத்திய அரசு அறிவித்தது செல்லும் என்று கூறி வழக்கை ரத்து செய்தனர்.