பாலியல் கொடுமையால் பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்..!
மகாராஷ்டிரா மாநிலத்தின் பயந்தர் பகுதியை சேர்ந்தவர் ராம்சரண் ராம்தாஸ் (21), போதை பழக்கத்துக்கு அடிமையான இவர் தனது உறவினர்கள் உட்பட 12 பேரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
ராம்சரணை திருத்த அவர் தாய் முயன்றுள்ளார், ஆனால் பெற்ற தாய் மற்றும் வளர்ப்பு தாயையுமே ராம்சரண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இதனால் மகன் மேல் வெறுப்படைந்த தாய் அவரை கொல்ல முடிவு செய்து கூலிப்படைக்கு முன்பணமாக ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து ராம்சரணை தனியாக அழைத்து சென்ற கூலிப்படையினர் அவர் கழுத்தை அறுத்து கொன்றனர்.இதுகுறித்து தகவலறிந்த போலீசார் ராம்சரணின் தாய் மற்றும் கூலிப்படையினர் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.