இந்திய பணக்காரர்கள் பட்டியல் : முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்
புதுடில்லி : 2017 ம் ஆண்டிற்கான இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை போப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் ரியலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 10 வது ஆண்டாக முதலிடத்தில் இருந்து வருகிறார்.முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஏறக்குறைய ரூ.2.5 லட்சம் கோடி. கடந்த ஆண்டை விட இவரது சொத்து மதிப்ப 26 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆசியாவின் டாப் 5 பணக்காரர்கள் பட்டியலிலும் இவர் இடம்பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி 45வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு இவர் 32வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் 2வது இடத்தில் விப்ரோ நிறுவனத்தின் அஜிம் பிரேம்ஜி 2வது இடத்தில் உள்ளார். பதஞ்சலி ஆயுர்வேத நிறுவன தலைவர் யோகாகுரு ராம்தேவ் கடந்த ஆண்டு இருந்த 48 வது இடத்தில் இருந்து, தற்போது 19வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.43,000 கோடி.