அகர்தலா நாட்டிலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம் என்ற பெருமையை பெற்றிருந்த கேரளாவை பின்னுக்கு தள்ளி, திரிபுரா மாநிலம் முதலிடத்தை பிடித்து விட்டதாக அம்மாநில முதலமைச்சர் மாணிக் சர்க்கார் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கல்வியறிவு நாளையொட்டி திரிபுரமாநிலத் தலைநகர் அகர்தலாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் பங்கேற்றார். அப்போது பேசிய மாணிக் சர்க்கார் நாட்டிலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம் என்ற பெருமையை பெற்றிருந்த கேரளாவை பின்னுக்கு தள்ளி, திரிபுரா மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது என்று தெரிவித்தார்.
நாட்டின் மக்கள் தொகை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு படி கேரளமாநிலம் 93.91 சதவிகிதம் கல்வியறிவு பெற்றிருந்தது. இப்போது 94.65 சதவிகிதம் என்ற உச்ச வரம்பை திரிபுரா மாநிலம் எட்டியுள்ளது. கடந்த 2001ம் ஆண்டு கல்வியறிவைப் பொருத்தவரை திரிபுரா 12வது இடத்தில் இருந்தது. இதையடுத்து நடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் போது கல்வியறிவில் 4 வது இடத்தை எட்டியிருந்தது.
இந்நிலையில் தற்போது இந்திய புள்ளியல் அதிகாரிகளின் துணையோடு நடந்த கணக்கெடுப்பில் கல்வியறிவில் திரிபுரா நாட்டில் முதல் இடத்தை பிடித்துள்ளது தெரியவந்துள்ளது என்று மாணிக் சர்க்கார் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…