முகேஷ் அம்பானியின் ஜியோ செல்ஃபோன் சேவை நிறுவனம் நஷ்டத்தில் ஓடுகிறதா…?
முகேஷ் அம்பானியின் ஜியோ செல்ஃபோன் சேவை நிறுவனமானது கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 271 கோடி ரூபாய் நிகர நஷ்டத்தை பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 21 கோடி ரூபாய் மட்டுமே நஷ்டம் ஏற்பட்டிருந்த நிலையில் இந்தாண்டு அது சுமார் 13 மடங்கு அதிகரித்துள்ளது. எனினும் அவரது மற்றொரு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மட்டும் கடந்த காலாண்டில் 8 ஆயிரத்து 109 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
ஆனால் அவருடைய சொத்து மதிப்பு மட்டும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 67% உயர்ந்துள்ளது என்பதும் குறுப்பிடத்தக்கது.