குஜராத் சட்டமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குஜராத்தில் காங்கிரஸ் சார்பில் பிரசாரத்தை இப்போதே தொடங்கிவிட்டார் ராகுல். இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் முக்கியமான வர்த்தக நகரான வடோதராவில் (பரோடா) நேற்று தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அதில் பங்கேற்றவர்கள் ராகுல் காந்தியிடம் சில கேள்விகளை முன்வைத்தனர். அப்போது, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. காரணம், அவர் செல்லுமிடங்களில் எல்லாம், தனது குடும்பமானது தீவிரவாதத்துக்கு பலியாகியிருக்கிறது என்று எப்போதும் கூறுவார்.ஆனால் அவர்களின் கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, பிரபாகரனின் உடலைப் பார்த்ததும் நானும் என் சகோதரி பிரியங்காவும் பெரிதும் வேதனையடைந்தோம். பிரபாகரனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதால் நான் துயரம் அடைந்தேன். மற்றவர்களின் துயரங்களில் பங்கு கொள்வதுதான் ‘காந்தி’ குடும்ப பாரம்பரியம் என்றார் அவர்.
ராகுல் காந்தியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ்காந்தியை தமிழகத்தில் வைத்து தற்கொலைப்படைத் தாக்குதல் மூலமாக கொன்றது இதே விடுதலை புலிகள் அமைப்பு தான் என்பதும் குறுப்பிடத்தக்கது.
சென்னை : சண்டிகர் மாநிலத்தில் இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட 5வது ஐபிஎஸ் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில்…
சென்னை : ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தற்போது தான் வடதமிழக மாவட்டங்களில் சற்று மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இன்னும்…
ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான நாக சைதன்யா - நடிகை சோபிதாவின் திருமணம் இன்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது.…
புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் பெருமழை பாதிப்பில் சிக்கிய புதுச்சேரியில் அதிகம் பாதிக்கப்பட்ட கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட இடங்களில்…
கடலூர்: பெஞ்சல் புயல் கனமழை காரணமாக வட தமிழக மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் இன்னும் வெள்ள…
சென்னை: வடசென்னை உயர்கல்வித்துறை சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் 79 புதிய திட்டப் பணிகளை…