கணவன் கண்முன்னே மனைவி கூட்டுப்பாலியல் செய்து வன்கொடுமை: உ.பி.யில் கொடூரம்!
கணவன் கண்முன்னே மனைவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் முஸாபர்நகர் அருகே உள்ள பெசரா கிராமத்துக்கு கணவன், மனைவி மற்றும் அவர்கள் 2 வயது மகன் ஆகியோர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது சாலையின் அருகே காரில் நின்ற 4 பேர்,அவர்கள் சென்று கொண்டிருந்த பைக்கை மறித்தனர். அருகிலுள்ள கங்கையாற்றின் பாலம் உடைந்துவிட்டது, வேறு வழியாகச் செல்லுங்கள் என்று அவர்களிடம் கூறியுள்ளனர். இதை நம்பி, அந்தக் குடும்பம் பைக்கை திரும்பியது. அப்போது பைக்கை இழுத்து நிறுத்திய அவர்கள், கணவனை அடித்து உதைத்தனர். 2 வயது மகனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அந்தப் பெண்ணை அருகிலுள்ள கரும்புத் தோட்டத்துக்குத் தூக்கிச் சென்றனர். அங்கு மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் தப்பியோடிவிட்டனர். அந்த வழியாக சென்ற விவசாயிடம் அந்தப் பெண் உதவிக் கேட்டதை அடுத்து அவர் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தார். போபால் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
பின்னர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பிஜேபி ஆளுகிற இம்மாநிலத்தில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது.