தனியார் துறையின் இடஒதுக்கீடு ஏற்புடையதில்லை ; நிதி அயோக் துணை தலைவர்
தனியார் நிறுவனங்களின் இடஒதுக்கீடு கொள்கை ஏற்க முடியவில்லை மற்றும் அவர்கள் வேலைவாய்ப்பு அதிகமாக்க வேண்டும் எனவும் நிதி அயோக் அமைப்பின் துணை தலைவர் திரு.ராஜீவ் குமார் தெரிவித்து உள்ளார்.
தனியார் துறையில் இட ஒதுக்கீடு சாத்தியமற்றது, அரசாங்கத்தால் 10 லட்சம் முதல் 12 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடியும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் இளைஞர்கள் வேலை தேடுகின்றனர். சிலர் முறைசாரா தொழிலில் ஈடுபடுகின்றனர். ஆனாலும் இத்துறை ஒரு கட்டத்தில் அதிக எண்ணிக்கையிலானோருக்கு வேலை வாய்ப்பை வழங்கக் கூடியதாக இருப்பதில்லை என்றார்.
சமீபத்தில் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், தனியார் துறையில் இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, கடந்த ஆண்டு தனியார் துறை இட ஒதுக்கீடு கொள்கையை வெளியிட்டு, பொருளாதார சுதந்திர சூழலில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டால் அது சமூக நீதியை கேலிக்கூத்தாக்கிவிடும் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் பல்வேறு தொழிலகக் கூட்டமைப்புகளும் இட ஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்தினால் அது தங்களின் வளர்ச்சி பாதிக்கப்படும், புதிய முதலீடு கள் வருவது தடைபடும் என்றும் சுட்டிக் காட்டின.
பிற அரசியல் கட்சியினர் இக்கொள்கையினை ஆதரிக்கும் நிலையில் நிதி அயோக்கின் துணை தலைவர் ராஜீவ் குமாரின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது