Categories: இந்தியா

சென்னையில் பலத்த பாதுகாப்பு !இன்று பிரதமர் மோடி வருகை ….

Published by
Dinasuvadu desk
                              Image result for modi
சென்னையை  பொறுத்தவரை   மழை பாதிப்புகள் இன்னும் சீராகவில்லை.இதற்கிடையில்  பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து காலை 7 மணி அளவில் தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை புறப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தை சுமார் 9 மணி அளவில் வந்தடையும் அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்கிறார்கள்.
                       

விமான நிலையத்தில் இருந்து அடையாறுக்கு மோடி ஹெலிகாப்டரில் செல்கிறார். அங்கு ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு செல்லும் அவர், அங்கிருந்து சாலை வழியாக சென்னை பல்கலைக்கழக வளாகத்தை அடைகிறார். அங்கு தினத்தந்தி நாளிதழின் பவள  விழாவை 11 மணிக்கு முடித்து கொண்டு திரும்பும் வழியில் எம்ஆர்சி நகரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இதனையடுத்து  அடையாறு கடற்படை தளத்திற்கு செல்லும் மோடி, ஹெலிகாப்டர் மூலம் விமான நிலையத்தை அடைந்து சுமார் 1 மணி அளவில் டெல்லிக்கு புறப்படுகிறார். இதனால் சென்னையில் பல்வேறு வழித்தடங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
Published by
Dinasuvadu desk
Tags: india

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

4 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

5 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

6 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

7 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

9 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

10 hours ago