சென்னையில் பலத்த பாதுகாப்பு !இன்று பிரதமர் மோடி வருகை ….
சென்னையை பொறுத்தவரை மழை பாதிப்புகள் இன்னும் சீராகவில்லை.இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து காலை 7 மணி அளவில் தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை புறப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தை சுமார் 9 மணி அளவில் வந்தடையும் அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்கிறார்கள்.
விமான நிலையத்தில் இருந்து அடையாறுக்கு மோடி ஹெலிகாப்டரில் செல்கிறார். அங்கு ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு செல்லும் அவர், அங்கிருந்து சாலை வழியாக சென்னை பல்கலைக்கழக வளாகத்தை அடைகிறார். அங்கு தினத்தந்தி நாளிதழின் பவள விழாவை 11 மணிக்கு முடித்து கொண்டு திரும்பும் வழியில் எம்ஆர்சி நகரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இதனையடுத்து அடையாறு கடற்படை தளத்திற்கு செல்லும் மோடி, ஹெலிகாப்டர் மூலம் விமான நிலையத்தை அடைந்து சுமார் 1 மணி அளவில் டெல்லிக்கு புறப்படுகிறார். இதனால் சென்னையில் பல்வேறு வழித்தடங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.