மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி.
டெல்லி: மகாத்மா காந்தியின் பிறந்தநாளான இன்று டெல்லியில் உள்ள அவரின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி.
நம் தேசப் பிதா மகாத்மா காந்தியின் 148வது பிறந்தநாள் இன்று. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்திற்கு இன்று காலை சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மேலும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளான இன்று அவருக்கும் அஞ்சலி செலுத்தினார் மோடி. இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
காந்தி ஜெயந்தி அன்று பாபுவை தலை வணங்குகிறேன். அவரின் உன்னத கொள்கைகள் உலகின் கோடிக்கணக்கான மக்களுக்கு உந்துதலாக உள்ளது என்று ட்வீட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.