புதுடில்லி: லோக்சபா தேர்தலில் வெற்றி பெற முடியாதவர், தன்னை விமர்சனம் செய்வதாகவும், கறுப்பு பணம் குறித்து நாட்டு மக்களை தவறாக வழிநடத்தவதாக பா.ஜ., மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.ஜெட்லியின் நண்பர்:இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: நான் வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தால், ஜெட்லி தற்போது நிதியமைச்சராக இருந்திருக்க முடியாது. முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் எனது நண்பர் இல்லை. ஆனால், அவர் ஜெட்லியின் நண்பர். ஜெட்லி எனது பின்னணி பற்றி மறந்துவிட்டார். அரசியலில் நுழைவதற்கு முன் பல தடைகளை சந்தித்துள்ளேன் . ஐஏஎஸ் பணியை, பணி ஓய்வு பெறுவதற்கு 12 வருடங்களுக்கு முன்பே ராஜினாமா செய்துவிட்டேன். அரசியலில் நுழைந்த பின், எனது தொகுதியை கண்டறிந்தேன். லோக்சபா தொகுதியை தேர்வு செய்ய எனக்கு 25 வருடங்கள் ஆகவில்லை லோக்சபாவின் முகத்தை பார்த்திராதவர்கள் என்னை கேள்விகேட்கிறார்கள். விமர்சனம் செய்கிறார்கள். கறுப்பு பணம்கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கறுப்பு பணம் பதுக்கிய 700 பேரின் விவரங்களை சுவிட்சர்லாந்தின் எச்எஸ்பிசி வங்கி இந்தியாவிடம் அளித்தது. அவர்களில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர்?
அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா? கறுப்பு பணம் மற்றும் பனாமா பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் மக்களை தவறாக வழிநடத்துகிறார். பனாமா பேப்பர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் பதவி விலகியுள்ளார். ஆனால், இங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…