வருகிற டிசம்பர் 18ஆம் தேதிக்குள் ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்திற்கு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் இன்று தேர்தல் கமிஷன் ஹிமாச்சல் தேர்தல் அட்டவணையை மட்டும் அறிவித்துவிட்டு, குஜராத் தேர்தலை அறிவிக்கவில்லை.
நவம்பர் 9ஆம் தேதி ஹிமாச்சலில் தேர்தல் நடை பெறும் என்றும், ஆனால், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி ஒருவர் இது காலம் வரை 6மாத காலத்திற்குள் தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் அட்டவணை அறிவிப்பது வழக்கம். அதற்கு மாறாக குஜராத்திற்கு தேர்தல் அட்டவணை இன்று அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அந்த முன்னாள் தலைமை அதிகாரி இன்று தேர்தல் அட்டவணை அறிவித்தால் இன்றிலிருந்து தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துவிடும்.
ஆனால், பிரதமர் இந்த மாதம் 16ஆம் தேதி மீண்டும் குஜராத்திற்கு சென்று பல புதிய திட்டங்களை அறிவிக்கவுள்ளதாக வந்த தகவல்கள் அடிப்படையில் தேர்தல் கமிஷன் குஜராத்திற்கு மட்டும் தேர்தல் அட்டவணை வெளியிடாதது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், ஹிமாச்சல் தேர்தலுக்கும் முடிவு அறிவிப்புக்கும் இடையே ஒரு மாத கால இடைவெளி என்பது குஜராத் தேர்தல் அந்த இடைவெளியில் நடத்தப்படும் என்பதற்கான அறிகுறி என்றும் அவர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…