கேரளாவில் உருவாகி இருக்கிறது இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஆலை…!
கேரளா: இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஆலையை கேரளா அரசு வயநாட்டில் உள்ள பனாசுரா சாகர் நீர்த்தேக்கத்தில் அமைத்துள்ளது.
இதனை KSSBஆல் சுமார் 6000 சதுர மீட்டர் அளவில் நீட்சி வழங்கியுள்ளது. இது ஒரு மெகா திட்டமாகும் இதன்மூலம் சுமார் 11kV அளவு மின்சாரம் கிடைக்கும். இது கேரளா இடது முன்னணி அரசு சார்பில் மின்சாரத்துறை அமைச்சர் M.M. மணி அவர்களால் இப்பணி தொடங்கி வைக்கப்பட்டது.
இதனை அமைச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில் பெருமிதமாக குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இன்னும் நிறைய ஆலைகளை உருவாக்க உள்ளதாக கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.