ஜாதி மறுப்பு தம்பதியினர்களின் குழந்தைகளை “ஜாதியற்றவர்” என தனிப் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு…! – கேரள அரசு அதிரடி.
ஜாதி மறுப்பு தம்பதியினர்களின் குழந்தைகளை “ஜாதியற்றவர்” என தனிப் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு…!
– கேரள இடது முன்னணி அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை பல ஆண்டுகளாக கலப்புத்திருமணத்தம்பதியர் சங்கம் கோரி வருகிறது.இது அனைத்து மாநிலங்களிலும் கொண்டுவரப்பட வேண்டும்.அப்படி சாதியற்றவர்களாக அறிவிக்கப்படுபவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் பினராயி விஜயன் ஏற்கனவே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனவும் “தலித்” மற்றும் “ஹரிஜனன்” போன்ற வார்த்தைகளை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த தடை என தொடர்ந்து ஜாதி,மத வேறுபாடுகளை தகர்த்தெறிந்து சமூக நீதியை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார் என்பது கவனிக்கதக்கது.