நவீன மயமாகும் கேரள அரசு மருத்துவமனைகள்…!
அரசு மருத்துவமனைகளை மக்கள் விரும்பிச் செல்லும் அளவிற்கு நவீனப்படுத்த கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசு “ஆர்த்ரம்” என்ற திட்டத்தை துவங்கியுள்ளது.
இதன்படி ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ வசதி இனி அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கும். நோயாளிகளுக்கு உடலளவிலும் மனதளவிலும் புத்துணர்ச்சி ஏற்படும் அளவிற்கு மருத்துவமனைகள் மாற்றப்படும்.
காத்திருக்கும் மக்களுக்கு சுகாதாரம் பற்றிய படங்களை காணும் வசதிக்கேற்ப தொலைக்காட்சிகள், குளிரூட்டப்பட்ட சோதனை அறைகள், வரிசையில் நிற்பதைத் தவிர்க்க ஆன்லைன் மற்றும் மொபைல் பதிவு முறை என பல்வேறு புதிய வசதிகளை ஏற்படுத்துகிறது கேரள அரசு.