ஜிஎஸ்டி-க்கு யாரெல்லாம் காரணம் தெரியுமா? : சொல்கிறார் பிரதமர் மோடி
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று ஆல் இந்தியா ரேடியோ வில் மண்கிபாத் எனும் நிகழ்ச்சியில் பேசுகையில் ஜிஎஸ்டி பற்றிய கருத்து ஒன்றை பதிவிட்டார்.
அதில் கூறியதாவது, “எல்லா கட்சிகளின் முடிவுப்படியே ஜி.எஸ்.டி அமலாகியுள்ளது. எனவே பொதுமக்கள் எங்களை மட்டும் திட்டாதீர்கள்” என அவர் கொண்டு வந்த திட்டம் மக்களிடம் எதிர்ப்பை சம்பாதித்ததால் அதனால் அதில் தனக்கு மட்டும் சம்பந்தம் இல்லை அனைத்து கட்சிகளுக்கும் இதில் பங்கு உண்டு என அடுத்தவர் மீது பழியை போட்டு தப்பித்து கொள்ள முயல்கிறார்.
அனைத்து கட்சிகளும் ஒப்புதல் அளித்தது பலவித வரிகளுக்கு பதில் ஒரே வரி என்ற திட்டத்துக்கு மட்டுமே தவிர அநியாய வரியை மக்கள் மீது திணிக்க அல்ல,
அதனை செய்தது பாஜக அரசு மட்டுமே.
பிரதமர் இப்படி கூறியதன் மூலம் மக்கள் இந்த திட்டத்தினால் அதிகம் பாதிப்படைந்துள்ளனர், அதனால் அவர் இப்படி மற்ற கட்சிகளின் மீது பழி கூறுகிறார்.