இந்திய வரலாற்றில் இன்றுதான் சீக்கியர்கள் மட்டுமே வசிக்கும் நகரம் உருவானது…!
வரலாற்றில் இன்று – அக்டோபர் 21, 1577 -இந்தியாவில் தாஜ்மகாலை விட அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் அமிர்தசரஸ் நகர் அமைக்கப்பட்ட தினம்
ராம் தாஸபூர் என்றழைக்கப்படும் அமிர்தசரஸ் நகர் சீக்கிய மத குருக்களுள் ஒருவரான குரு ராம் தாஸ் என்பவரால் அமைக்கப்பட்ட தினம் இன்று.
சீக்கியர்களின் பத்து மதகுருக்களுள் இவர் நான்காவது குரு ஆவார். முழுவது சீக்கிய நகராக பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரை இவர் அமைத்த தினம் இன்று.
இது வெளி நாட்டு சுற்றுலா பயணிகளைக் காட்டிலும், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு இடமாக அமைந்துள்ளது. சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரஸ் தங்க கோயில் விளங்குகிறது. தங்க நகரம் என்றழைக்கப்படும், இது முழுக்க முழுக்க சீக்கியர்களின் நகரமாகும்.
பாகிஸ்தானின் வாகா எல்லைக்கு 28 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.