ஆஜராகவில்லை என்றால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கபடுவார் விஜய் மல்லையா!உச்சநீதிமன்றம் தீர்ப்பு …
பண மோசடி வழக்கில் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு திருப்பிக் கொடுக்கவில்லை.இந்நிலையில் இன்று டெல்லியில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ,அவரை டிசம்பர் 18ஆம் தேதி ஆஜராக வேண்டும் இல்லையெனில் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என்று நீதிபதி அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வங்கிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார். கிங்பிஷர் நிறுவனத்தின் லோகோவை பயன்படுத்த 2 லட்சம் டாலர் தொகை ரிசர்வ் வங்கி முன் அனுமதி பெறாமல் கை மாறியது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் பெரா வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அமலாக்கத் துறையினர் பல தடவை வலியுறுத்தியும் இந்த வழக்கு விசாரணைக்கு மல்லையா வரவில்லை. எனவே நீதிபதி அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தார் .