புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு நாளைக்குள் துணை வேந்தரை நியமிக்க ஐகோர்ட் உத்தரவு
புதுச்சேரி :புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு இவ்வளவு நாள் துணை வேந்தர் இல்லாமல் செயல்பட்டு வந்தது.ஆனால் தற்போது புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு நாளைக்குள் துணை வேந்தரை நியமிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நிரந்தர துணை வேந்தரை நியமிக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிரந்தர துணை வேந்தரை நியமிக்கக் கோரிய பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.