வரலாற்றில் இன்று:இந்தியாவின் பெரும் பகுதியை கட்டி ஆண்ட முகாலாயப் பேரரசர் ஔரங்கசீப் பிறந்த தினம்…
வரலாற்றில் இன்று நவம்பர் 3, இந்தியாவின் பெரும் பகுதியை கட்டி ஆண்ட முகாலாயப் பேரரசர் ஔரங்கசீப் பிறந்த தினம்
இவர், 1658 நவம்பர், 3ம் நாள் ஷாஜகான் மற்றும் மும்தாஜின் தம்பதியர்களுக்கு ஐந்தாவது வாரிசாக பிறந்தார். பாரசீக மொழியில் பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன் என பொருள் படும் ’ஆலம்கீர்’எனவும் அழைக்கப்பட்டார் ஔரங்கசீப். வயதான தந்தையாரை சிறையில் போட்டு சகோதரர்களையும் கொன்று விட்டு முகலாய சக்ரவர்த்தியாக முடி சூட்டிக் கொண்டவர்தான். எனினும் அவுரங்கசீப் இந்தியாவின் பெரும் பகுதிகளை ஒருங்கிணைத்து, திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசர் என்ற பெருமைக்குரியவர் ஔரங்கசீப். இவரது ஆட்சிகாலத்தில் முகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு வரை பரந்து விரிந்திருந்தது.