ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் கிராம மக்கள் : ஆதார் அட்ராசிட்டி
உத்திரகாண்ட் மாநிலத்தில் ஹரித்துவாரில் உள்ள கைந்திகட்டா எனும் கிராமத்தில் சுமார் குடும்பம் உள்ளது. இவர்களுக்கு சமீபத்தில் ஆதார் கார்ட் வழங்கப்பட்டது. அதில் அனைவருக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஜனவரி 1 ஆம் தேதி பிறந்தநாளாக அச்சிடப்பட்டுள்ளது.
மற்ற விபரங்களான முகவரி, பெயர் என மற்ற விபரங்கள் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த ஆதார் விபரங்களை தற்போது அரசு போன் நம்பர், வங்கி கணக்கு, ஆகிய மற்ற அனைத்து தேவைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மற்ற கட்சியினர் எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசு ஊழியர்கள் இப்படி அலச்சியபோக்காக நடந்து கொள்வது அந்த பகுதியினரை எரிச்சலடைய செய்துள்ளது.