கேரளாவில் சோதனையின் போது பிஜேபி அலுவலகத்தில் பயங்கர ஆயுதங்களை கைப்பற்றியது கேரளா காவல்துறை….! தொடர் விசாரணை
கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பிஜேபி கட்சி அலுவலகத்தை கேரளா மாநில காவல்துறை மற்றும் வெடிகுண்டு துப்பறியும் குழு நடத்திய சோதனையில் கத்தி,அருவா,வாள் மற்றும் வெடிகுண்டு போன்ற கொடூரமான ஆயுதங்களும் கிடைத்துள்ளன…
பிஜேபி கட்சியின் அலுவலகத்திற்குள் எப்படி இந்த ஆயுதங்கள் வந்தன என்பது குறித்து கேரளா காவல்துறை தொடர் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.நேற்றிற்கு முன்தினம் கேரளாவை ஆளும் கட்சி மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்திய அமைதி பேரணியில் நாட்டு வெடிகுண்டு விசப்பட்டது. இதனால் பலர் படுகாயம் அடைந்தனர்.
கடந்த வாரம் தான் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வன்முறைகளில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டி, அதைக் கண்டித்து அங்கு “மக்கள் யாத்திரை”(ஜன் ரக் ஷ யாத்திரா) என்ற பெயரில் 15 நாட்கள் பிரசார யாத்திரையை நடத்த பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்தது. அதனை பிஜேபி கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா தலைமையில்
நடத்தினர் கேரளா மாநில பிஜேபியினர்.இரண்டாம் நாள் உத்திரபிரதேஷ முதல்வர் யோகி ஆதித்தியாநாத் தலைமையிலும் நடந்தது. நேற்று நடந்த கூட்டத்தில் தமிழ் மாநில தலைவர் தமிழிசை பங்கெடுத்தார்..இதில் பல அமைச்சர்கள்,கட்சியின் அகில இந்திய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர் என்பதும் குறுப்பிடத்தக்கது.