தமிழக அரசியலில் மோடியின் திட்டம் தான் என்ன? : புரியாமல் தவிக்கும் பாஜக நிர்வாகிகள்

Default Image

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்தது என்ன செய்ய போகிறார் என தெரியாமல் தமிழக பாஜக நிர்வாகிகள் குழம்பி  இருக்கின்றனர். தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்க்கு பின் தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.

சசிகலாவிற்கு எதிராக ஓபிஎஸ், சசிகலாவை சந்திக்க தாமதம் காட்டிய ஆளுநர், வருமான வரித்துறையின் பல அதிரடி நடவைக்கைகள், ஆர்கே நகர்  இடைத்தேர்தல் ரத்து, சசிகலாவிற்கு எதிராக இபிஎஸ், ஓபிஎஸ் இபிஎஸ் இணைப்பு என பல மாற்றங்கள் நிகழ்ந்தது. இவற்றுக்கு பின்னால் பாஜக இருகிறதா இல்லையா என தெரியவில்லை அனால் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் என அனைவரும் இந்த மாற்றங்களுக்கு பின்னும் பாஜக இருக்கிறது என குற்றம் சாட்டின.

இந்நிலையில் தினத்தந்தி பவளவிழாவிற்கு வந்த மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இது தமிழக பாஜக நிர்வாகிகளுக்கே முதல் நாள் இரவுதான் தெரிய வந்ததாம் .
பவளவிழாவில் பேசிய மோடி பேச்சில், அவர் தமிழகத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்துள்ளார் என தெரிகிறது. மேலும் மூத்த பத்திரிக்கையாளர் மோகனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார். இதுவும் தமிழக பாஜகவினருக்கு புரியவில்லை.
இதனை குறித்து தமிழக பாஜக நிர்வகியை தொடர்புகொண்ட பொது அவர் தெரிவித்தது “ஒரு மாதத்திற்கு முன்பே அவர் தமிழகம் வருவது எங்களுக்கு தெரியும், ஆனால் கருணாநிதியை சந்தித்தது எங்களுக்கு  முந்திய நாள் தான் தெரியும். மேலும் அவர் இங்கு ஓர் பத்திரிக்கையாளர் மூலம் தமிழகத்தில் உளவுபார்த்திருகிறார். மோடி அவர்கள் மூத்த பத்திரிக்கையாளர்  மோகனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியது எங்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.”எனவும் தெரிவித்தார்.

இதிலிருந்து ஒன்று மட்டும் தெரியுது மோடி எப்போ என்ன சொல்வார் என்ன செய்வார் என்பது அவரது கட்சி நிர்வாகிகளுக்கே தெரிவது இல்லை!
மேலும் திடிரென சசிகலாவின் குடும்பத்தை குறிவைத்து 182 இடங்களில் வருமான வரி சோதனை, கருணாநிதி மோடி சந்திப்பு, அடுத்த தேர்தலில் யாருடன் கூட்டணி, அமித்ஷா தமிழகதிற்கு  வருவது இரு முறை ஏன் தள்ளிவைக்கப்பட்டது என மோடியும், பாஜக தேசிய தலைவர்  அமித்ஷாவும் எடுக்கும் முடிவுகளும், திட்டங்களும் என்னவென்று  தெரியாமல் தமிழக பாஜக தலைவர்கள், தொண்டர்கள்  அனைவரும்  புரியாமல் தவிகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்