தேச விரோதிகளால் கடத்தப்பட்டு! மீட்கப்பட்ட பெண் நிருபர் …
இந்தியருக்கு உதவியால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் பெண் நிருபர், 2 ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்டார். மும்பையைச் சேர்ந்தவர் ஹமீத் அன்சாரி. இவருக்கு இன்டர்நெட் மூலம் பாகிஸ்தான் பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. அவரை பார்ப்பதற்காக ஹமீத் அன்சாரி கடந்த 2012ம் ஆண்டு, ஆப்கானிஸ்தான் வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்தார். அவர் உளவு பார்க்க வந்ததாக கைது செய்யப்பட்டார். அவருக்கு ராணுவ நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. பாகிஸ்தான் பெண் நிருபர் ஜீனத் ஷாஷாதி அவருக்கு செய்ய நினைத்தார் . இவர் தனியார் டிவி சேனலில் பணியாற்றினார். அவர் ஹமீத் அன்சாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். பெஷாவர் உயர் நீதிமன்றத்திலும், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அதன்பின் இவரை காணவில்லை. ஜீனத் குடும்பத்தினர், அவரை தேடும் முயற்சியில் கடந்த 2 ஆண்டுகளாக ஈடுபட்டனர். ஜீனத் பற்றியும் காணாமல் போனவர்களை விசாரிக்கும் ஆணையம் விசாரித்து வந்தது. இந்நிலையில், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து கடந்த வியாழக்கிழமை ஜீனத் மீட்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். தேச விரோதிகளால் கடத்தப்பட்ட ஜீனத், பலுசிஸ்தான் பழங்குடியினர் உதவியுடன் மீட்கப்பட்டதாக விசாரணை ஆணையத்தின் நீதிபதி ஜாவேத் இக்பால் தெரிவித்தார்.