என்ன இது உலக அதிசையத்துக்கு வந்த சோதனை !பராமரிப்பு இல்லாமல் காலியாகும் அபாயம்..
தாஜ் மஹால் என்பது உலக அதிசையம் என்பதே அனைவரும் அறிந்ததே .
ஆனால் சமீபத்தில் உத்திர பிரதேஷ முதல்வர் தாஜ்மஹாலை சுற்றுலாப் பட்டியலில் இருந்து எடுத்துள்ளார்.மேலும் இதை இந்திய சுற்றுலா பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்துக்குரியது ஆகும்.இது குறித்து பா.ஜ.க. பிரமுகர் கூறும் போது தாஜ்மஹால் இந்திய வரலாற்றிற்கு ஏற்பட்ட கறை என்றும் கூறியுள்ளார் .இது பெரிய சர்ச்சையாக வெடித்தது .இந்த கட்சி எம்.பி. முகலாய அரசர்கள் துரோகிகள் அவர்கள் கட்டிய நினைவுச்சின்னம் எதற்கு என்கிறார்.மேலும் உ.பி. சட்ட மன்ற உறுப்பினர் ஆக்ராவில் இருந்த இந்து கோவிலை இடித்து தான் தாஜ்மஹால் கட்டபட்டதாக கூறினார்.
தாஜ்மஹால் கூறித்த சர்சை நாளுக்கு நாள் நீண்டு வருகிறது.இந்நிலையில் இன்று மத்திய சுற்றுலா துறை தாஜ்மஹால் பராமரிக்க டெண்டர் விட்டது இதை எடுக்க எந்த தனியார் நிறுவனமும் முன்வரவில்லை என்பது தான் பெரிய சோகம் .முறையான பராமரிப்பு இல்லை என்றால் தாஜ்மஹால் கதி என்னதான் ஆகுமோ என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். என்ன இது உலக அதிசயத்துக்கு வந்த சோதனை ?