அனைத்து சாதியினரும் பூசாரியாகலாம் என்பதை சாத்தியமாக்கியுள்ளது கேரளா இடது முன்னணி அரசு…!
கேரள தேவஸ்வம் போர்டு வரலாற்றில் முதல் முறையாக தலித் சமூகத்தை சேர்ந்த ஆறு பேரை கோவில் மேல்ஷாந்தி யாக நியமித்து திருவிதாங்கூர் தேவஸ்வம் உத்தரவு வழங்கியுள்ளது..
கேரளாவில் உள்ள பிரபல கோவில்களில் காலியாக இருந்த பூசாரிகள் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொண்ட பிணராய் விஜயன் தலைமையிலான அரசு தேவசம் பணியாளர் தேர்வாணையம் என்ற அமைப்பை உருவாக்கி தேர்வு நடத்தியது..
திருவிதாங்கூர் தேவசத்தில் காலியாக இருந்த 62 பணியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் எந்தவொரு சிபாரிசுக்கும் இடமளிக்காமல் மெரிட் பட்டியலில் தேர்வான 26 பிராமணர்கள், 30 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருடன் 6 தலித் சமூகத்தை சேர்ந்தவர்களும் மேல்ஷாந்தி யாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்..