பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை…துப்பு கிடைத்துள்ளது கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி…!

Default Image

மூத்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக, முக்கியமான துப்பு, சிறப்பு புலனாய்வு போலீசாருக்கு கிடைத்துள்ளதாகவும், கொலையில் தொடர்புடையவர்கள் யார் என்பதை கண்டறிந்துள்ளதாகவும் கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.பெங்களூருவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் (55) செப்டம்பர் 5-ஆம் தேதி பெங்களூருவில் அவரது வீட்டு வாசலிலேயே, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது வீட்டு சிசிடிவி-யில் 3 கொலையாளிகளின் படங்கள் பதிவாகி இருந்தன.

ஆனால், அவர்கள் ஹெல்மெட்அணிந்திருந்ததால் உடனடியாக அடையாளம் காண முடியாமல் போனது.நாடு முழுவதும் பெரும் பரபரப்பைஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக உளவுப் பிரிவு ஐஜி பி.கே.சிங் தலைமையிலான 21 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டது. கொலையாளிகள் குறித்து புலனாய்வுக் குழுவினர் தீவிர விசாரணையில் இறங்கினர். கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் துப்பு கொடுப்போருக்கு ரூ. 10 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று கர்நாடக அரசும் அறிவித்திருந்தது.

“இந்நிலையில், கௌரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக, சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு குறிப்பிடத்தக்க துப்புகள் கிடைத்துள்ளன; இதன்மூலம் கொலைக்குப் பின்னணியில் இருப்பவர் யார் என்பதைக் கண்டறிந்துவிட்டோம்; இருப்பினும் ஆதாரங்களைத் திரட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது; அதைத்தொடர்ந்து, குற்றப் பத்திரிகை முழுமையாகத் தாக்கல்செய்யப்படும்” என்று கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டிதெரிவித்துள்ளார்.

இது போன்ற முற்போக்காளர்கள் கொலைகள் குறித்து பிரதமர் மோடி மௌனமாய் இருப்பது எங்களை போன்றவர்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது என தேசிய விருது பெற்ற நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார் என்பது குறுப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்