வரலாற்றில் இன்று இந்தியாவோடு இணைந்த புதுச்சேரி மாநிலம்….!
வரலாற்றில் இன்று 1954, நவம்பர் 1 புதுச்சேரி மாநிலம் இந்தியாவோடு இணைக்கப்பட்டது 1673ஆம் ஆண்டில் பிரஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி புதுச்சேரியில் தன் வாணிகத் தொடர்பைத் தொடங்கியது. 1721இல் மொரீஷியசும் மாகியும் அடுத்த பத்தாமாண்டில் ஏனாமும், அதற்கு ஏழு ஆண்டுகள் கழித்து காரைக்காலும் பிரெஞ்சினரால் கையகப்படுத்தப் பட்டன. 1814 ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட வெர்சேல்ஸ் அமைதி உடன்படிக்கைக்குப் பின்னால் ஆங்கிலேயர் வசமிருந்த பிரெஞ்சிந்தியப் பகுதிகள் பிரெஞ்சினரிடமே ஒப்படைக்கப்பெற்றன.
இந்திய நாடு விடுதலை பெற்றதை அடுத்துத் புதுச்சேரி பகுதிகளிலும் விடுதலைப் போராட்டக் கிளர்ச்சிகள் வெடித்தன. இந்திய பிரான்ஸ் அரசுகளுக்கும் இடையில் எற்பட்ட உடன்படிக்கையை அடுத்து . புதுச்சேரி, மாஹே, ஏனாம் மற்றும் காரைக்கால் என் பிரஞ்சுக்காரர்கள் வசமிருந்த பகுதிகள் அனைத்தும் புதுச்சேரி மாநிலமாக ஒன்றிணைக்கப்பட்டு 1954, நவம்பர் 1 முதல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.