பீகாரில் இட ஒதுக்கீட்டை உயர்த்தும் திருத்தச் சட்டத்துக்கு தடை!

Patna High Court

பீகார் : பீகாரில் இட ஒதுக்கீடு வரம்பை 50%-ல் இருந்து 65% ஆக அதிகரிப்பதற்கான திருத்தச் சட்டத்தை பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பீகார் மாநிலத்தில் தற்பொழுது ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு ஜாதி வாரி கணக்கீடுப்பை நடத்தி முடித்தது. அதன் விபரங்களை அம்மாநில அரசால் கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதன்படி, பீகாரில் உள்ள 13.07 கோடி மக்கள் தொகையில் 2.02 கோடி பேர் பொது பிரிவினர் என்றும், 3.54 கோடி பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்றும், 4.70 கோடி பேர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்தவர்கள் என்றும், 2.56 கோடி பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதில் ஓபிசி பிரிவினருக்கு 30 சதவீத இடஒதுக்கீடானது 43 சதவீதமாகவும், எஸ்சி வகுப்பை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 16 சதவீத இடஒதுக்கீடு 20 சதவீதமாகவும், பழகுடியினருக்கு வழங்கப்பட்டு வந்த 1 சதவீத இடஒதுக்கீடு 2 சதவீதமாகவும் உயர்த்தப்படுவதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் 9 அன்று, சட்டப்பேரவையில் பீகார் மாநிலத்தில் இடஒதுக்கீட்டை பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 50% லிருந்து 65% ஆக உயர்த்தி மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பாட்னா உயர்நீதிமன்றம், இது அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15 மற்றும் 16 ஆகிய பிரிவுகளின் சமத்துவ விதியை மீறுவதாகக் இருக்கிறது என்று கூறி, ரத்து செய்து உத்தரவிட்டது. இதற்கு முன் மகாராஷ்டிரா அரசு 50 சதவீதம் இடஒதுக்கீடு வரம்பை மீறி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்தால் அது ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்